8-ஆம் வகுப்பு தேர்ச்சியா..!தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.....!

தமிழக அரசிற்கு உட்பட்ட திண்டுக்கல் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் (TNCSC) காலியாக உள்ள பட்டியல் எழுத்தல், உதவியாளர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்தம் 28 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எஸ்சி, 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திண்டுக்கல் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 28

பணி : பட்டியல் எழுத்தல், உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

பட்டியல் எழுத்தர் - ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காவலர் - அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபவட்சம் 32 - 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • பட்டியல் எழுத்தர் - ரூ.2,410 கூடுதலாக ரூ.4,049 (அகவிலைப்படி)
  • உதவுபவர் - ரூ.2,359 கூடுதலாக ரூ.4,049 (அகவிலைப்படி)
  • காவலர் - ரூ.2,359 கூடுதலாக ரூ.4,049 (அகவிலைப்படி)

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 19.11.2021 தேதிக்குள் மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்- 624 004 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், 19.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tncsc.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்

Previous Post Next Post

نموذج الاتصال