தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சமூக மருத்துவத்துறை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், இணை பேராசிரியர் சிவச்சந்திரன், துணை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.