சென்னையில் 22k தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ₹5.676க்கு விற்கப்பட்ட 1 கிராம் தங்கத்தின் விலை ₹44 உயர்ந்து, ₹5,720க்கு விற்கப்படுகிறது. இதனால், ஒரு சவரனின் விலை புதிய உச்சமாக ₹352 உயர்ந்து, ₹45,760க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹45,520க்கு விற்கப்பட்டது. இதுதான் இதுவரை ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்ட அதிக விலை ஆகும்.