தமிழகம் முழுவதும் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120-யை கடந்துள்ளது. வரத்து குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து ரூ.100க்கு விற்பனையாகிறது. எனவே, இந்த நிலையை மாற்றி, ஆண்டின் எல்லா காலங்களிலும் சந்தைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஒரே சீராக இருப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.