சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு கறுப்பு நிற ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையை பல்கலை. நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. ஆளுநர் ரவி தலைமையில் நாளை பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. காவல்துறை அறிவுறுத்தல் காரணமாக பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கறுப்பு நிற உடைகளை அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் நேற்று கேட்டுக்கொண்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தடையை வாபஸ் பெற்றது.