தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று சென்ற 25ஆம் தேதி தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், பர்ஸ்ட் லுக், வரும் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து டீசர், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.