பெரியார் பல்கலை.. பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு உடைகளை அணியவேண்டாம் என கூறியதாக வந்த செய்தியை சேலம் காவல்துறை மறுத்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், 'பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடைகளை தவிர்க்குமாறும், கைபேசிகளை தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இதுபோன்ற எந்த வித அறிவுறுத்தல் கூறப்படவில்லை' என குறிப்பிட்டுள்ளது.