நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்....ஆன்லைன் வகுப்புகள் தொடரும்‌...அரசு புதிய அறிவிப்பு.....!

 தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.


 வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது.ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. 

அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது. காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் வரும் வாரம் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. நாளை முதல் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பில் இணைந்து கொள்ளலாம். மேலும் நவம்பர் 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال