அமுத கவி உமறுப்புலவர் வாழ்க்கை வரலாறு...!

 அமுத கவி உமறுப்புலவர் வரலாற்றுக் குறிப்புகள்!

இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் ஊரில் பிறந்தவர்.


இவரது தந்தை செய்கு முஹம்மது அலியார்.


எட்டயபுர அரச புலவரான கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் கற்றார்.


அமுத கவி என்றும் அருட்கவி என்றும் அழைக்கப்பட்டார்.


செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கிணங்க சீறாபுராணத்தை இயற்றத் தொடங்கினார்.


நூல் முற்றிலும் நிறைவடைவதற்கு முன்பே சீதகாதி இறந்துவிட்டார்.


பின்னர் அபுல் காசிம் மரைக்காயர் என்பவரின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.


உமறுப்புலவர் அபுல் காசிம் மரைக்காயர் அவர்களை நினைவு கூறும் வகையில் சீறாப்புராணத்தில் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றியுள்ளார்.


இவர் இயற்றிய நூல்கள்


சீறாப்புராணம் 

 சீதக்காதி நொண்டி நாடகம்

 திருமண வாழ்த்து

 முதுமொழிமாலை ஆகியவை


இவரது நினைவாக எட்டயபுரத்தில் உமறுப்புலவர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது




Previous Post Next Post

نموذج الاتصال