WhatsApp வாய்ஸ் மெசேஜ் அனுப்புவோருக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் வரப்போகும் அப்டேட் !

 வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆண்ட்ராய்டி மொபைல் போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சத்தை எளிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. விரைவில் இந்த புதிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப்:

உலக மக்கள் அனைவராலும் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2009 அன்று வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சிறந்த செயலியாக உருவெடுத்துள்ளது. வாட்ஸ் ஆப் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மெசேஜ்கள் அனுப்புவது, ஸ்டேட்டஸ் வைப்பது அதனை தவிர்த்து UPI பேமெண்ட் சேவைகள் வாட்ஸ்அப் சாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் மறையும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் வாட்ஸ்அப் வெப் மூலம் கணினி உட்பட பிற சாதனங்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து தனியுரிமைக் கொள்கையின் படி வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ மற்றும் டேட்டஸ் போன்றவற்றை யார் பாக்க வேண்டும் என்பதை பயனர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில் புதிய அப்டேட்டாக ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது.

வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்கையில், திரையில் Pause பட்டன் தோன்றும். மெசேஜ் பேசுகையில், திடீரென ஏதேனும் இடையூறு வந்தால், வாய்ஸ் மெசேஜை பாஸ் செய்து, மீண்டும் Record செய்யலாம் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.6.7 இல் இந்த Pause பட்டன் வருகிறது. வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்கையில் நீண்ட நேரம் பட்டனை ட்ச் செய்தே வைக்க வேண்டிய அவசியம் இல்லை


Previous Post Next Post

نموذج الاتصال