வாட்ஸ் அப்-பில் "வியூ ஒன்ஸ்" முறையில் புதிய அப்டேட்..!!NEW UPDATE IN WHATS UP-BIL "VIEW ONES" MODE..!!

    
இனி வாட்ஸ் அப்-பில் "வியூ ஒன்ஸ்" முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட "வியூ ஒன்ஸ்" வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப்-பில் அறிமுகப்படுத்தப்பட்டது. "வியூ ஒன்ஸ்" மூலம் வரும் புகைப்படங்களை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இந்த வசதி அறிமுகமானதில் இருந்து 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க பயனர்களுக்கு அனுமதி இருந்தது. 

ஆனால் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் புதிய வசதி அறிமுகமாக இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா சேனலின் சில ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.
Previous Post Next Post

نموذج الاتصال