புதிதாக தொடங்கப்பட்ட இடங்களுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 36 இடங்களில் 5ஜி சேவையை ஜியோ வழங்கி வருகிறது.

 தமிழகத்தில் காரைக்குடி, உதகமண்டலம் உள்பட புதிதாக 6 இடங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன், தமிழ்நாட்டில் 36 இடங்களில் ஜியோ 5ஜி சேவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

Jio 5G

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.


தமிழ்நாட்டில் ஏற்கெனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துகுடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவில்பட்டி, பொள்ளாச்சி, ஆம்பூர், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஏற்கனவே உள்ள நகரங்களுடன் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி அல்லி நகரம்,உதகமண்டலம் மற்றும் வாணியம்பாடி ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் ஜியோ ட்ரூ 5G விரைவாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கியிருப்பது எங்கள் ஜியோ நிறுவனத்திற்கு பெருமைக்குரிய விஷயமாகும். 2023ல் ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை ஒவ்வொரு இந்தியரும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் INFOABLE தமிழ் (tamilinfoable.blospot.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Previous Post Next Post

نموذج الاتصال