2022-23 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு பார்வை(5) இல் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதள வாயிலாக இணைப்பில் காணும் கால அட்டவணையின்படி பொது மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட, அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர் நிலை-1 / தொழிற்கல்வி ஆசிரியர் (விவசாயம்) / பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பொது மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது என அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை) தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொது மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு இணைப்பில் காணும் விவரப்படி நடைபெற உள்ளதால் இதன் விவரங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / மாநகராட்சி உய] / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பொது மாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்த நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்திட சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.