காலையில் எழுந்தவுடன் சிறிது நீர் அருந்துவது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். இதனால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும். ஆனால், காலையில் காஃபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்துவது உடல்நலனுக்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக ஆரோக்கிய பானங்கள் குடிக்கலாம். தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடித்தால், உடல்வலி, ரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற உபாதைகளின் தீவிரம் குறையும்.
காலையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசம் சீராகி, உடல் எடை குறையும். தொண்டை பாதிப்பு, கண் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், டிபி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நாள்பட்ட மூட்டுவலி போன்றவற்றின் பாதிப்புகளை குறைக்க இது உதவும். காஃபி, தேநீருக்கு பதிலாக கிரீன் டீ அல்லது மூலிகை டீயை அளவாக அருந்தலாம். இது ஆரோக்கியமானது.