தங்களது பயணிகள் வாகனம் மற்றும் மின்சார வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களின் அனைத்து ரக பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். விலை உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்ற தகவலும், பிற விவரங்களும் இன்னும் சில வாரங்களில் வெளியிடப் படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை டியாகோ முதல் பிரீமியம் எஸ்யுவியான சஃபாரி வரையிலான பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகள் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.