தஞ்சை: தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினர் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, எல்பிஎப், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.