இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் தினசரி சமையலுக்கு சிலிண்டர் பயன்பாட்டையே சார்ந்துள்ளன.
பெண்களின் ஆரோக்கியத்தையும் சமையலறை வசதியையும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானிய விலையில் சிலிண்டர் வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
31ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு அவசியம்..!
சமீபத்தில், மானிய விலையில் சிலிண்டர் பெறும் பயனாளிகளின் விவரங்களை சரிபார்ப்பதற்காக விரல் ரேகை பதிவு (Biometric Verification) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எந்த பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்த, உரிய பயனாளிகள் ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்காக மார்ச் 31, 2025 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
31ஆம் தேதிக்குள் பதிவு செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?
- பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய தவறினால், அவர்கள் மாநிய விலையில் சிலிண்டர் பெற முடியாமல் போகும்.
- மானியத்தை தொடர அனுமதிக்க, அரசால் கேட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- சிலிண்டர் விநியோகம் குறித்த சிக்கல்கள் அல்லது தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விரல் ரேகை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை (Aadhaar Card)
- கேஸ் சிலிண்டர் கணக்கு விவரம்
- பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்
உடனே உங்கள் பதிவு செய்யுங்கள்!
கேஸ் சிலிண்டர் மானியத்தை தொடர விரும்பும் பயனாளிகள் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். உங்கள் அருகிலுள்ள ஏஜென்சியை தொடர்புகொண்டு உடனடியாக பதிவு செய்யுங்கள்!
இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து அவசியமான நடவடிக்கை எடுக்க உதவுங்கள்!