தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும்....!

தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், " தமிழகத்தில் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும்.


2021-22ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு....!


ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.



புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம்." என்றார்.

Previous Post Next Post

نموذج الاتصال