வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன்காரணமாக நவ.8, 9-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதர கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மீதமுள்ள தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்தும் வருகிற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வுகள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.