தபால் அலுவலக கணக்கு தொடர்பான விதிமுறைகளை இந்திய தபால் துறை மாற்றியுள்ளது.
தபால் அலுவலக கணக்குகளை மூடுவதற்கான விதிமுறையில் ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தபால் அலுவலக கணக்கு வைத்திருப்போர் கணக்கை மூடும்போது பாஸ்புக்கை (passbook) சமர்ப்பிக்க வேண்டும்.ரெகரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட், மாத வருமானத் திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகிய தபால் அலுவலக திட்டங்களுக்கான கணக்கை மூடும்போது பாஸ்புக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தபால் துறை ஜனவரி 13ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் அலுவலக கணக்குகளை மூடும்போது கட்டாயமாக பாஸ்புக் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும், கணக்கு மூடப்பட்ட தேதி, முத்திரையுடன் பாஸ்புக்கில் கடைசி பரிவர்த்தனைக்கு பின் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகணக்கு மூடப்படுவது சரிபார்க்கப்பட்ட பின் கணக்குதாரரிடம் கணக்கு மூடப்பட்டதற்கான குறிப்பு வழங்கப்படும். கணக்கு அறிக்கை தேவைப்பட்டால் அதுவும் வழங்கப்படும். மேலும், கணக்கு மூடப்படும்போது கணக்கில் மொபைல் நம்பரும், பான் கார்டு நம்பரும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Watsapp : TI News Watsapp
Telegram : TI News Telegram