தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம் டில்லியில் முதற்கட்ட ஆலோசனை..!

    

தென்மாநிலங்களில் ஓடும் நதிகளை இணைக்கும் விவகாரத்தில், காவிரியுடன் பெண்ணாற்றை இணைப்பதை கர்நாடகா எதிர்ப்பது தெரியவந்துஉள்ளது.



தென்மாநில நதிகளை இணைப்பதற்கான முதற்கட்ட ஆலோசனைகளை மத்திய அரசு துவக்கி உள்ளது. அதன்படி, டில்லியில் ஜல்சக்தி அமைச்சகம் அமைந்துள்ள ஷ்ரம் சக்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய ஜல்சக்தி துறை செயலர் பங்கஜ் குமார் பேசுகையில், ''கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது. வீணாக கடலில் கலக்கும் நதிகளின் நீரை சேமித்து, மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். ''எனவே, எந்த பேதங்களும் இல்லாமல் அனைத்து மாநிலங்களும் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, தமிழகம் சார்பில் பங்கேற்ற சந்தீப் சக்சேனா, ''இந்த திட்டத்தை, மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார். கர்நாடகா தரப்பில், 'காவிரி மற்றும் பெண்ணாற்றை இணைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இதன் வாயிலாக தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும்' என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், இத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த இரு வாரங்களில் மீண்டும் நடைபெற உள்ளது. அதில், திட்டப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தேவைப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்ததுஅணை பாதுகாப்பு தொடர்பான தரத்தை பராமரிக்கவும், அணை தொடர்பான பேரிடர்களைத் தடுக்கவும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்க்கவும் அணை பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், பணிகளை நிறைவேற்ற தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த ஆணையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

இது குறித்து ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:அணை பாதுகாப்பு சட்டத்தின் அதிகாரங்களை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.


இந்த ஆணையம் ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களின் கீழ் செயல்படும். கொள்கை மற்றும் ஆய்வு, தொழில்நுட்பம், ஒழுங்குமுறை, பேரிடர், நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு இந்த ஐந்து உறுப்பினர்கள் பொறுப்பு வகிப்பர். இந்த ஆணையம் டில்லியை தலைமைஇடமாக வைத்து செயல்படும். மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலோ அல்லது மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையிலோ உள்ள பிரச்னைகளை தீர்ப்பதே ஆணையத்தின் முக்கிய செயல்பாடாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tamil Infoable News-ன் Latest Updates-க்கு Cilk Here Watsapp Image...




Previous Post Next Post

نموذج الاتصال