75ஆம் ஆண்டு சுதந்திர தின ஏற்பாடுகள் :
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி'என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
இதன் படி, 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் சுதந்திர கொடியை பட்டொளி வீசி பறக்க வைக்க வேண்டுமென வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்திய மக்களும் தங்களது சோசியல் மீடியா முகப்பு படத்தில் மூவர்ண கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறைக்கூவல் விடுத்திருந்தார்.
மேலும், இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 75 நகரங்களில் 75 வாரத்திற்கு சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தும் பொருட்டு, 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டை பகுதியைச் சுற்றி 1,000- க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி, டெல்லி, பெங்களூரு, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை முதல் மாநில அரசுகளின் கோட்டை கொந்தளங்கள் வரை வர்ணம் பூசப்பட்டது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது.