இந்தியா சுதந்திர தினம் வரலாறு :
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் இயக்கம் முதலாம் உலகப்போரின் போது தொடங்கப்பட்டது. உண்ணாவிரம், உப்பு சத்தியாகிரகம், தடியடி, துப்பாக்கிச்சூடு என பல விஷயங்களையும் கடந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று, பிரிட்டிஷ்-ன் 200 ஆண்டுகால ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது.இந்திய சுதந்திர மசோதா 4 ஜூலை 1947 இல் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. இது 15 ஆகஸ்ட் 1947ல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை அறிவித்தது. அதன்பின்னர், சுதந்திர கிடைத்ததோடு, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடாகவும் பிரிந்தது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற முக்கியப் பெயர்களில் சிலர் சுதந்திரப் போராட்டத்திற்காக முக்கியப் பங்காற்றியுள்ளனர். தமிழகத்தில் கூட கட்டபொம்மன் முதற்கொண்டு வ.உ.சிதம்பரனார் வரை பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர்.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம்:
இந்திய சுதந்திர தினத்தின் போது முழு நாட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு, பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கு நடத்தப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையின் லாஹோரி வாயிலுக்கு மேலே இந்திய தேசியக் கொடியை ஏற்றினார், அதன் பின்னர், ஆண்டுதோறும் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டுமக்களுக்காக உரையாற்றுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.