முதல்வர் ஸ்டாலின், நாளை மாலை விமானத்தில் டில்லி செல்கிறார். அங்கு 17ம் தேதி, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.அதன்பின், பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடக்க உதவியதற்கும், துவக்க விழாவில் பங்கேற்றதற்கும் நன்றி தெரிவிக்க உள்ளார்.
அத்துடன், தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார். முதல்வருடன் தமிழக அதிகாரிகளும் செல்ல உள்ளனர். பா.ஜ.,வுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், பிரதமரை தனியாக சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் பேசவிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
Tags
cm Stalin