ஏற்கனவே ஜியோ போன், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில், ஜியோ தற்போது லேப்டாப் திட்டத்தினையும் கையில் எடுத்துள்ளது. இந்த லேப்டாப்-கிற்காக நிறுவனம் மைக்ரோசாப்ட் மற்றும் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த லேப்டாப் இன்னும் 3 மாதங்களில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பு
இது சாமானியர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இது சாமானியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சந்தைக்கு வரும் முன்னரே இது பெரும் எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஜியோபுக்
ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4ஜி லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை 184 டாலர்கள் (இந்திய விலையில் 15,000 ரூபாய்) இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மாபெரும் கூட்டணி
ஜியோ லேப்டாப் குவால்கம் மற்றும் மைக்ரோசாப்ட் உதவியுடன் தயாரிக்கப்படும் நிலையில், விண்டோஸ் ஓஎஸ்-ம் கூடுதலாக இந்த மாபெரும் கூட்டணியின் இணைவதாகவும் தெரிகின்றது. இந்த லேப்டாப்கள் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
By Pugazharasi S Goodreturns