NEET - UG 2025 விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியீடு - முக்கிய தகவல்கள் !


NTA அறிவிப்பு - 14.01.2025

NEET போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகள் எழுத விரும்பும் +2 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.


APAAR ID: NEET 2025க்கு கட்டாயம்

NEET - UG 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR - ID (Automated Permanent Academic Account Registry - ID) அவசியமாக தேவைப்படும். APAAR ID இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது.


APAAR ID பெறுவதற்கான கட்டாய நிலைகள்:

  • தகுந்த விவரங்கள்: உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களுக்கு பூரணமாக பொருந்த வேண்டும்.
  • முக அடையாளம்: Face Recognition தொழில்நுட்பம் மூலம் உங்கள் ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆதார் இணைப்பு: ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் செயல்படும்படியாக இருக்க வேண்டும், அதாவது, SIM கார்டு செயல்பாட்டில் இருந்து OTP பெறத்தக்க வகையில் Recharge செய்யப்பட்டிருக்க வேண்டும்.


ஆதார் விவரங்களை புதுப்பிக்க:

  • உங்கள் அருகிலுள்ள வங்கிகள், அஞ்சலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களை அணுகவும்.


ஆதார் திருத்தங்களை கவனமாக செய்ய வேண்டியது மிக முக்கியம்:

  • பெயர் திருத்தம் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே செய்ய முடியும்.
  • பிறந்த தேதி திருத்தம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்ய முடியும்.


மொபைல் எண்ணின் முக்கியத்துவம்:

  • NEET விண்ணப்பம், Admit Card, Result, மற்றும் Counselling போன்ற எல்லா நிலைகளிலும் OTP பெற SIM கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

இந்த முக்கிய வழிமுறைகளை பின்பற்றி, NEET - UG 2025 தேர்வுக்கு தயாராகுங்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال