கருத்த முகத்தை சிவக்க செய்யும் ஆர்கானிக் க்ரீம் ! இதை எவ்வாறு பயன்படுத்துவது !


வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.இதனால் விளம்பரங்களை பார்த்து கண்ட கெமிக்கல் க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கீர்ம்கள் தற்காலிக சிவப்பழகை மட்டுமே கொடுக்கும்.நிரந்தர சிவப்பு அழகு கிடைக்க வேண்டும் என்றால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு க்ரீம் செய்து முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.


தேவையான பொருட்கள்:-

1.பீட்ரூட்
2.கற்றாழை ஜெல்
3.அரிசி மாவு
4.தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

• ஒரு கப் பீட்ரூட் தூண்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

• அதன் பின்னர் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 1/4 கப் அரிசி மாவு மற்றும் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணையை எடுத்து பீட்ரூட் சாறில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

• பிறகு ,எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.இதை பீட்ரூட் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

• க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கி கொள்ளவும்.இந்த க்ரீமை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இதை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முக கருமை நீங்கி முகம் சிவப்பழகு பெறும்.

Previous Post Next Post

نموذج الاتصال