விசாகப்பட்டினம் பீமிலி கடற்கரையில் முதல் முறையாக இரவில் கடல் நீல நிறமாக மாறிய அதிசயம் நேற்றிரவு நிகழ்ந்தது. டச்சு குடியிருப்பு பகுதியாக அடையாளப்படுத்தப்படும் பீமிலி கடற்கரையில் பயோலுமினென்சென்ஸ் ஏற்பட்டதை மக்கள் கண்டு ரசித்தனர். பூஞ்சை போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்குள் ஏற்படும் வேதியியல் எதிர்வினையானது, அவை கரைக்கு அடித்துவரும்போது நீல நிறமாக வெளிப்படும் என கடலாய்வாளர்கள் கூறுகின்றனர்.