இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, அம்ரித் கலாஷ் என்ற Fixed Deposit திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி FD டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு இது 7.6%ஆக வழங்கப்படும். இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது 400 நாட்கள் அவகாசம் கொண்டது. ஜூன் 30 வரை இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.