கடந்த மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். மே மாதம் முதல்வாரத்தில் வெளியாகிறது மேல்நிலை இரண்டாமாண்டு பொதுதேர்வு முடிவுகள். தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லின்கை பயன்படுத்தவும்.
மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2023- பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை பார்க்க தேவையான இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுதேர்வுகள் :
கடந்த மார்ச் மாதம் துவங்கிய மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல்வாரம் வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு :
சமீபத்தில் பேசியிருந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீட் தேர்வு பாதிக்காத வகையில் மாணவர்களுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்படாமல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் :
இந்நிலையில் வருகின்ற மே மாதம் 8ம் தேதி காலை 9.30 மணியளவில் கீழ்காணும் இணையதளங்கள் வாயிலாக மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், அந்தந்த மாவட்ட நூலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களின் பள்ளிகளின் வாயிலாகவும் இலவசமாக தேர்வு முடிவுகள் கிடைக்கும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.