கடந்த 2 தினங்களாக உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.