டயட் கோக் போன்ற பானங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளினால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என WHO தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிப்புகளை வழங்க அஸ்பார்டேம் என்ற மூலப்பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுவதாகவும், அஸ்பார்டேம் ஆனது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை என IARC மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.