இன்றே கடைசி நாள்!
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என TANUVAS துணைவேந்தர் செல்வகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர். '+2 மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவம் & பராமரிப்பு படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. ஆக. முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும். tanuvas இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என்றார்.