ஒரு மனிதர் நீண்ட நடை பயணத்தை மேற்கொண்ட பொழுது ஒரு தென்னை மரத்தை பார்த்தான் அப்பொழுது கூறுகிறான் என்ன இவ்வளவு பெரிய மரத்தில் சிறிய காய் படைத்திருக்கிறாரே என்ன இது கடவுள் படைப்பு என கூறி செல்கிறான் . அப்புறம் ஒரு பூசணிக்கொடியை பார்க்கிறான் என்ன இவ்வளவு சிறிய செடியில் இவ்வளவு பெரிய காயா என்ன கடவுள் படைப்பு முட்டாள்தனமாக இருக்கிறது என்று கடவுளை திட்டிவிட்டு செல்கிறான். அடுத்து ரோஜா செடியை பார்க்கிறான் இவ்வளவு அழகான பூச்செடியில் முள் இருக்கிறதே முட்டாள்தனமாக கடவுள் படைத்திருக்கிறார் என்று கூறி தென்னை மரத்திற்கு கீழே உறங்குகிறான் அப்பொழுது காற்று அடித்து தென்னைக்காய் அவன் மண்டையின் மேலே விழுந்தது அப்பொழுது தான் நினைத்தான் இதே பெரிய காயாக இருந்தால் என் நிலைமை என்ன ஆகும் அப்பொழுது தான் நினைத்தான் கடவுள் படைப்பு ஒரு காரணமாக தான் இருக்கும் அதே போல் தான் ரோஜா செடியில் முள் இருக்கிறது என்று உணர்ந்தான் .
கடவுள் படைப்பு அற்புதம் ..
அதுபோல் தான் நண்பர்களே...
ஒவ்வொரு மனிதர்களையும் கடவுள் ஒரு காரணத்திற்காக படைத்திருக்கிறார்.
அந்த காரணத்தை அறிந்து வாழ்வை எதிர்க்கொண்டால் வெற்றி நிச்சயம்.
Super bro
ReplyDelete