பிறப்பும்,இறப்பும் ஒரு முறைதான்..!
பிறப்பு ஒன்று இருந்தால் அதனுடன் இறப்பு ஒன்றும் இருக்கிறது . பிறப்பும், இறப்பும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள்.
பிறப்பு எப்படி இன்றியமையாததோ அது போல் தான் இறப்பும். பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இறப்பு துக்கத்தைக் கொடுக்கிறது..
உயிர் இருந்தால்தான் மனிதன்! இல்லையேல் பிணம்! உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய் விட்டால்? இறப்புதான்!
உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும்தான்!இந்தியாவின் இயற்பியலாளர் சர்.சி.வி.இராமன் சொல்கிறார்," மோட்சம்,அழியாத ஆத்மா,ஆவி, மறுபிறப்பு எல்லாம் பொய்..மனிதன் பிறக்கிறான்,உயிரோடு வாழ்கிறன், பின்னர் இயற்கை யை தழுவுகிறான்.
இதுதான் உண்மை..
ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்து இருந்தது.
எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.
ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டு இருந்தார் சர்வசாதாரணமாக!
வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவிஇறந்திருக்கும் போது, நீங்கள் கவலை இன்றி பாடிக் கொண்டு இருக்கிறீர்களே?''..
ஞானிசொன்னார்,
''பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.
என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய் விட்டன.
இடையில் வந்தவை இடையில் போயின.இதில் வருத்தப்படு வதற்கு என்ன இருக்கிறது?''.. என்றார்..
பிறப்பும், இறப்பும் ஒரு முறைதான் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும். அதனால், இருக்கும்போது இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.
மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது முக்கிய இல்லை . அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.