தமிழக பள்ளி மாணவனின் 1000 ரூபாய் செயற்கைகோள்..!

தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 1,000 ரூபாயில் செயற்கைகோள் கண்டுபிடித்து வியக்க வைத்துள்ளார்.
மிகச்சிறிய செயற்கைகோள் 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபிரகாஷ் என்ற மாணவர் மிகச்சிறிய அளவில் செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Inner Orbital Satellite எனும் தனது Projectஐ ஜெயபிரகாஷ் வெறும் 1,000 ரூபாயில் செய்துமுடித்துள்ளார். அவரது இந்த செயற்கைகோள் மூலம் Troposphere மற்றும் Stratosphere வரை சென்று அங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை, அழுத்தம், உயரம், கார்பன்மோனோக்ஸைடின், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகியவற்றின் அளவுகளை அறிந்து SD Cardயில் பதிவிட்டுவிடும். 

அதன் பின்னர் அதிலிருந்து Dataவை எடுத்து பகுப்பாய்வு செய்தால் அந்த உயரத்தில் வானில் உள்ள நிலையை அறிய முடியும் என்கிறார் ஜெயபிரகாஷ். 

155 கிராம் எடை,

மேலும் அவர், எளிய மக்கள் ஒரு ஆலையினால் எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பதை இந்த செயற்கைகோள் உதவியுடன் அறியலாம், இதற்காக நாசா அல்லது இஸ்ரோவிடம் சென்று கேட்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் கூறியுள்ளார். 

இந்த சிறிய செயற்கைகோள் 155 கிராம் எடை கொண்டது என்றும், இது வெர்சன் 1 செயற்கைகோள் தான், வெர்சன் 2வை உருவாக்கி வருகிறேன் என்றும் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال