ஜனவரி 1, 2024 ஆம் ஆண்டு முதல் சில விதிகள் மாற உள்ளன. சிம்கார்டு வாங்குவதற்கு டிஜிட்டல் KYC கட்டாயம் ஆக உள்ளது.
இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் நடைமுறையில் உள்ள சில விதிகள் மாறிவருகின்றன. குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்கள், வங்கி வட்டி நடைமுறைகள் உள்ளிட்டவை காலாண்டுக்கு முறை அப்டேட் ஆவதை காண முடியும். அதுபோக பயனர்களின் பாதுகாப்பு கருதியும் நடைமுறை சிக்கல்களை களையவும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகளின் அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு முதல் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அதில் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம். சிம்கார்டு வாங்க புதிய நடைமுறை: சிம்கார்டு வாங்குவதற்கு முன்பு பேப்பர் ஆவணங்களை கொடுத்தாலே போதும். டிஜிட்டல் முறையில் ஆவணங்களை செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வந்தாலும் அது கட்டாயம் கிடையாது.
கொடுக்க விரும்பாவதவர்கள் பேப்பர் ஆவணங்களை கொடுத்து வாங்கும் நடைமுறை இருந்தது. ஆனால், வரும் 2024 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே கே.ஒய்.சி ஆவணங்களை சிம்கார்டு வழங்கும் நிறுவனங்கள் பெறுவது கட்டாயம் ஆகியுள்ளது. எனினும், புதிய மொபைல் இணைப்பு பெறுவதற்கான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத யுபிஐ அக்கவுண்ட்கள் காலாவதி ஆகிவிடும். தேசிய பேமண்ட் கார்பரேஷன் (NPCI) இதற்கான உத்தரவை யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் செயலிகளுக்கு பிறப்பித்துள்ளது.
மலிவு விலையில் சிலிண்டர்: ராஜஸ்தான் மாநிலத்தில், பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு புதிய சிலிண்டரின் விலை ரூ.450 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.500 க்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
வருமான வரி தாக்கல்:
வருமான வரி தாமதாக தாக்கல் செய்பவர்களுக்கான கடைசி நாள் டிச. 31 ஆகும். எனினும், வழக்கமான வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் ITR ஜூலை 31 என்றே நீடிக்கிறது. தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
பேங்க் லாக்கர் ஒப்பந்தம்:
பேங்க் லாக்கர் வசதியை பெற்றிருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தை ரிவைஸ் செய்து டிச.31- க்குள் கையெழுத்திட வேண்டும். இதை செய்ய தவறினால், மறுநாளே வங்கி லாக்கர் முடக்கப்படும்.
பிபிஎப் வட்டி உயர்வு:
கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படும் PPF வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த வட்டி விகிதங்கள் மாற்றிஅமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்யும் அவகாசம் 14. 03. 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாக பயனர்கள் இலவசமாக அடுத்த ஆண்டு மார்ச் வரை அப்டேட் செய்து கொள்ளலாம். நேரில் சென்று அப்டேட் செய்ய ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது நினைவு கொள்ளத்தக்கது.