கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும் 'போட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. புலி, கசட தபற படங்களை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் இப்படத்தின் கதைக்கரு, நடுக்கடலில் ஒரு குழுவின் படகு பயணமும், உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சியும்தான் என்று தெரிகிறது. இந்த படத்தின் டீசரை, நடிகர்கள் ஆமிர்கான், கிச்சா சுதீப், நாக சைதன்யா, பிரித்விராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.