நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போது சிலிண்டர் எரிவாயு இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலிண்டர் எரிவாயுவிற்கான ரூபாய் 50 லட்சம் காப்பீடு பற்றி பலருக்கும் தெரியாத நிலை உள்ளது.
அதாவது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி விபத்து மூலம் உயிரிழப்பு அல்லது சொத்து இழப்பு போன்றவை நிகழும் பட்சத்தில் ரூபாய் 50 லட்சம் காப்பீடு பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் போன்றவை அனைத்தும் ஐ எஸ் ஐ முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும். மேலும் விபத்து நடந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் தனது எல்பிஜி நிறுவனம் மற்றும் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து தெரிவிக்க வேண்டும். காப்பீடு தொகை குறித்து கோரிக்கை வைக்கும் போது நிறுவனத்திற்கு விபத்துக்கான எஃப் ஐ ஆர் நகல், மருத்துவ ரசீது, மருத்துவமனை பில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு மட்டுமே ரூபாய் 50 லட்சத்திற்கான காப்பீடு தொகை வழங்கப்படும்.