சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அறிவித்த 1913 எண் செயல்படாததால் புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக பிஎஸ்என்எல் இணைப்பு சென்னை மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு எண்ணாக அறிவிக்கப்பட்ட அந்த இணைப்பு வேலை செய்யவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தனர்.
பிஎஸ்என்எல் கனெக்டிவிட்டி கொடுக்க முடியவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக பிரச்சனை இருக்கிறது என்பதால் அந்த எண்ணுக்கு மாற்று எண்ணாக 3 எண்களை கொடுத்துள்ளனர். அதன்படி 044 – 2561 9206 | 044 – 2561 9207 | 044 – 2561 9208 ஆகிய 3 எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.