தேசத்தை பாதுகாக்க வேண்டும், கல்வியை பாதுகாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்திட வேண்டும்,நீட் தேர்வை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் வே. அர்ஜுன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.சந்துரு. கிளை நிர்வாகிகள் பிரேம்குமார், ஆகாஷ், ஜெனிபர்,சரோஜினி,தமிழரசன், ராஜதுரை,எடிசன், ஜோஸ்வா, வீரராஜ், திலீப், ரமணா, ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர்.