சார்ஜ் இல்லாமல் இயங்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா போன்: விலை மற்றும் அம்சங்கள் என்ன?


டெஸ்லா ஸ்மார்ட்போன் பற்றிய வதந்திகள் இணையதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. இந்த புதிய சாதனம் சார்ஜ் இல்லாமல், கூடவே இன்டர்நெட் தேவையின்றி செயல்படும் எனக் கூறப்படுகிறது. சூரிய சக்தி சார்ஜிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்களுடன் இணைந்த தொழில்நுட்பத்தால் இது செயல்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெஸ்லா போன் – எதிர்பார்ப்புகள் மற்றும் உண்மைகள்


எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும், டெஸ்லா போன் தொடர்பான பல விளம்பரங்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.


சார்ஜிங் வசதி:

இந்த போன் சூரிய சக்தியை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் திறனைக் கொண்டது என கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே சோலார் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் நிலையில், இது சாத்தியமான தொழில்நுட்ப மேம்பாட்டாக இருக்கலாம்.


இன்டர்நெட் தேவையில்லை:

ஸ்பேஸ்எக்ஸ் வழங்கும் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் நேரடியாக இணையும் திறனை இந்த போன் கொண்டிருக்குமாம். இது 5ஜி நெட்வொர்க் கிடைக்காத இடங்களிலும் செயல்படலாம் எனக் கூறப்படுகிறது.


அசாதாரண அம்சங்கள்:


வதந்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் பின்வரும் அம்சங்களை கொண்டிருக்கும்:

1. மூளை-இயந்திர இணைப்பு (BMI): எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி சாதனங்களை கட்டுப்படுத்தும் திறன்.

2. செவ்வாய் கிரக இணைப்பு: செவ்வாய் கிரகத்திலும் இயங்கும் நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்.


விலை எவ்வளவு?


இந்த சாதனத்தின் ஆரம்ப விலை சுமார் $100 (சுமார் ₹8,300) ஆக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.


டெஸ்லா போன் குறித்த செய்திகள் உண்மையானதா அல்லது வெறும் வதந்தியா என்பதை மஸ்க் மற்றும் டெஸ்லா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். எலான் மஸ்க் டெஸ்லா போனை அறிமுகப்படுத்தினால், அது மொபைல் சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என நிச்சயம் கூறலாம்.




Previous Post Next Post

نموذج الاتصال