மின்சார வாகனங்களில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் Greaves Electric Mobility Limited (GEML) நிறுவனம் Ampere பிராண்டின் கீழ் புதிய குறைந்த விலையில் மின்சார இருசக்கர வாகனத்தை சந்தைக்கு கொண்டுவந்துள்ளது – Reo 80.
ரூ.59,900 Ex-Showroom விலையில், Reo 80 மாடல் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய, RTO பதிவு தேவையில்லாத வாகனமாக வந்துள்ளதால், இது அனைத்து தரப்பு மக்களிடமும் பரபரப்பாக பேசப்படுகிறது.
Reo 80 – முக்கிய அம்சங்கள்:
- அதிகபட்ச வேகம்: 25 கிமீ/மணி (Low-Speed Category – No License Required)
- மொத்த ரேஞ்ச்: ஒரே சார்ஜ் மீது 80 கிமீ
- டிஸ்ப்ளே: வண்ண LCD டிஸ்ப்ளே
- பேட்டரி: LFP (Lithium Ferrous Phosphate) Battery – பாதுகாப்பான மற்றும் நீடித்த தொழில்நுட்பம்
- பிரேக்: முன்புறம் டிஸ்க் பிரேக்
- தொடக்கம்: Keyless Start
- வண்ணங்கள்: சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் மேலும்
- சக்கரம்: அலாய் வீல்களுடன்
யாருக்கெல்லாம் இது சிறந்த தேர்வு?
- மாணவர்கள்
- முதன்முறையாக வாகனத்தை ஓட்டுபவர்கள்
- குறுகிய தூர பயணிகள்
- வயதானவர்கள் மற்றும் பெண் பயணிகளுக்கு வசதியான தேர்வு
Reo 80 – பிஸினஸ் மற்றும் சந்தை வளர்ச்சி:
GEML சமீபத்தில் மார்ச் 2025-இல் 6,000க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது மாதந்தோறும் 52% வளர்ச்சி என்பதைக் குறிக்கிறது. இது இந்தியாவில் மின்சார வாகன துறையில் பெரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.
Greaves Cotton Ltd நிறுவனம் தனது 165 வருட பாரம்பரியத்தை மின்சார இயக்கத்தில் ஒருங்கிணைத்து, இந்தியாவின் சூழலியல் எதிர்காலத்துக்கான தீர்வுகளை உருவாக்கி வருகிறது.
Reo 80 விலை மற்றும் கிடைப்பது எங்கே?
இந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் விநியோகம் தொடங்கும் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ₹59,900 என்ற குறைந்த விலைப் பட்டியலுடன், இது budget EV scooter segment-இல் Game Changer ஆக இருக்கிறது.