சந்திரயான்-3 திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளதாக இஸ்ரோ துணை இயக்குனர் எஸ்.வி.சர்மா கூறினார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 117 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. சந்திரயான்3 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.