இரவு நேரத்தில் மாவுச்சத்து கொண்ட உணவுகளை (கார்போஹைட்ரைட்) உட்கொள்வதால் உடல் எடை கூடும் என்று பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ஃபிட்னஸ் டிரைனர் ரம்யா ப்ரியா, "எந்த சாப்பாடு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு கலோரிகளை உட்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை செலவிட்டாலே உடல் எடை குறையும்” என்று கூறியுள்ளார்.