இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அந்தவகையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இன்று மதியம் 2.20 மணிக்கு PSLV-C55 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தியது. கடல்சார் பாதுகாப்பு & கப்பல் போக்குவரத்து கண்காணிப்புக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.