உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலில் ஏற்படும் தீங்குகளை தவிர்ப்பதற்கு நிலையான நடைமுறைகளை உருவாக்கவும் உறுதி ஏற்கும் விதமாக இந்த நாள் அமைகிறது. பூமியை காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.