தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். மேற்குவங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று எச்சரித்துள்ளது.