ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பேரீச்சம் பழ விற்பனை முன்னெப்போதும் இல்லாததை விட அதிகம் சூடு பிடித்துள்ளது. நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பேரீச்சம் பழங்கள் உட்கொள்வது வழக்கம். வழக்கமாக விற்பனையாவதை விட ரம்ஜான் காலத்தில் 50 சதவீதம் அளவுக்கு இறக்குமதி பேரீச்சம் பழங்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பேரீச்சம் பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.