டெல்லியில் இன்று நடக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொள்ள உள்ளார். டெல்லி காமராஜ் லேன் பகுதியில் உள்ள எல்.முருகன் இல்லத்தில் மாலை 6:30க்கு தமிழ் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க....